நாளாகமத்தின்
முதலாம் புத்தகம்
௧
ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
௧-௩ ஆதாம், சேத், ஏனோஸ், கேனான்,
மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா.
௪ சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள்.
யாப்பேத்தின் சந்ததியினர்
௫ கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.
௬ அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா, ஆகியோர் கோமரின் மகன்கள்.
௭ எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
காமின் சந்ததியினர்
௮ கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் மகன்களாவார்கள்.
௯ சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.
௧௦ நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.
௧௧ லுதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயிம் (எகிப்து)
௧௨ மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)
௧௩ கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான்.
௧௪ அவன் எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்
௧௫ ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
௧௬ அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
சேமின் சந்ததியினர்
௧௭ ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் ஆகியோர் சேமின் மகன்களாவார்கள்.
௧௮ அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.
௧௯ ஏபேருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும்.
௨௦ அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராகை,
௨௧ அதோராம், ஊசால், திக்லா,
௨௨ ஏபால், அபிமாவேல், சேபா,
௨௩ ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனைவரும் யோக்தானின் மகன்களாவார்கள்.
௨௪ சேம், அர்பக்சாத், சாலா,
௨௫ ஏபேர், பேலேகு, ரெகூ,
௨௬ செரூகு, நாகோர், தேராகு,
௨௭ ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.
ஆபிரகாமின் குடும்பம்
௨௮ ஈசாக்கும், இஸ்மவேலும் ஆபிரகாமின் மகன்களாவார்கள்.
௨௯ கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்:
இஸ்மவேலின் மூத்த மகனான நெபாயோத், மற்ற மகன்களான கேதார், அத்பியேல், மிப்சாம்,
௩௦ மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
௩௧ யெத்தூர், நாபீஸ், கேத்மா, ஆகியோர்.
௩௨ கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.
௩௩ ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.
Isaac’s Descendants
௩௪ ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் மகன்கள்.
௩௫ ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.
௩௬ ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் மகன்கள்.
௩௭ நகாத், சேராகு, சம்மா, மீசா ஆகியோர் ரெகுவேலின் மகன்கள்.
சேயீரிடமிருந்து ஏதோமியர்கள்
௩௮ சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் மகன்கள்.
௩௯ லோத்தானின் மகன்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.
௪௦ அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோர் சோபாலின் மகன்கள். அயாவும், ஆனாகும் சிபியோனின் மகன்கள்.
௪௧ ஆனாகின் மகன்களில் திஷோனும் ஒருவன். அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் ஆகியோர் திஷோனின் மகன்கள்.
௪௨ பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் மகன்கள்.
ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் மகன்கள்.
ஏதோமின் அரசர்கள்
௪௩ இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களின் பெயர்கள்:
பேயோரின் மகன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.
௪௪ பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் இவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
௪௫ யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய அரசன் ஆனான்.
௪௬ ஊசாம் மரித்த பின், பேதாதின் மகன் ஆதாத் அவனுக்குப் பதில் அரசன் ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.
௪௭ ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
௪௮ சம்லா மரித்த பின் சவுல் புதிய அரசன் ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.
௪௯ சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
௫௦ பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான்.
௫௧ ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத்.
௫௨ அகோலிபாமா, ஏலா, பினோன்,
௫௩ கேனாஸ், தேமான், மிப்சார்,
௫௪ மக்தியேல், ஈராம் ஆகியோர் ஏதோமின் தலைவர்கள் ஆனார்கள்.