௩
தாவீதின் மகன்கள்
௧ தாவீதின் சில மகன்கள், எப்ரோன் என்னும் நகரத்திலே பிறந்தனர். இது தாவீதின் மகன்களின் விபரம்.
தாவீதின் முதல் மகன் அம்னோன். அம்னோனின் தாய் அகிநோவாம். அவள் யெஸ்ரேயேல் எனும் ஊரினள்.
இரண்டாவது மகனின் பெயர் தானியேல் ஆகும். இவனது தாயின் பெயர் அபிகாயேல். இவள் கர்மேல் யூதா எனும் ஊரினள்.
௨ மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய் மாக்கா. இவள் தல்மாயின் மகள். தல்மாய் கேசூரின் அரசன்.
நான்காவது மகன் அதோனியா. இவனது தாய் ஆகீத்.
௩ ஐந்தாவது மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தாள்.
ஆறாவது மகன் இத்ரேயாம். இவனது தாய் எக்லாள். இவளும் தாவீதின் மனைவி தான்.
௪ இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் தாவீதிற்குப் பிறந்தவர்கள்.
தாவீது, எப்ரோனில் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆண்டான். தாவீது எருசலேமில் 33 ஆண்டுகள் அரசாண்டான்.
௫ கீழ்க்கண்டவர்கள் தாவீதிற்கு எருசலேமில் பிறந்த மகன்கள்:
பத்சுவாளுக்கு, நான்கு மகன்கள் பிறந்தனர். இவள் அம்மியேலின் மகள். சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் ஆகியோர் பத்சுவாளின் மகன்கள்.
௬-௮ இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், நோகா, நேபேக், யப்பியா, எலிசாமா, எலியாதா, எலிபேலேத் ஆகிய ஒன்பது பேரும் தாவீதின் மகன்களே.
௯ தாவீது தனது பிற மகன்களைத் தனது வைப்பாட்டிகளிடம் பெற்றெடுத்தான். தாமார் தாவீதின் மகளாவாள்.
தாவீதின் காலத்திற்குப் பிறகு வந்த யூத அரசர்கள்
௧௦ ரெகொபெயாம் சாலொமோனின் மகன். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்.
௧௧ யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் அகசியா, அகசியாவின் மகன் யோவாஸ்.
௧௨ யோவாஸின் மகன் அமத்சியா, அமத்சியாவின் மகன் அசரியா, அசரியாவின் மகன் யோதாம்.
௧௩ யோதாவின் மகன் ஆகாஸ், ஆகாஸின் மகன் எசேக்கியா, எசேக்கியாவின் மகன் மனாசே.
௧௪ மனாசேயின் மகன் ஆமோன், ஆமோனின் மகன் யோசியா.
௧௫ யோசியாவின் மகன்களின் பட்டியல் இது: முதல் மகன் யோகனான். இரண்டாம் மகன் யோயாக்கீம். மூன்றாம் மகன் சிதேக்கியா. நான்காம் மகன் சல்லூம்.
௧௬ யோயாக்கீமின் மகன் எகொனியா. இவனது மகன் சிதேக்கியா.
பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு தாவீதின் குடும்பம்
௧௭ எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல்.
௧௮ மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா ஆகியோர்கள் அவர்கள்.
௧௯ செருபாபேல், சிமேயி ஆகியோர் பெதாயாவின் மகன்கள். மெசுல்லாம், அனனியா ஆகியோர் செருபாபேலின் மகன்கள். செலோமீத் இவர்களின் சகோதரி.
௨௦ செருபாபேலுக்கு மேலும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசா பேசேத் ஆகியோராவர்.
௨௧ அனனியாவின் மகன் பெலத்தியா. எசாயா இவனது மகன் ரெபாயா. ரெபாயாவின் மகன் அர்னான். இவனது மகன் ஒபதியா. ஒபதியாவின் மகன் செக்கனியா.
௨௨ இது செக்கனியாவின் சந்ததியினரின் பட்டியல்: இவனது மகன் செமாயா. செமாயாவிற்கு அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் எனும் ஆறு மகன்கள் இருந்தனர்.
௨௩ எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் எனும் மூன்றுபேரும் நெயாரியாவின் மகன்கள்.
௨௪ ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி எனும் ஏழு பேரும் எலியோனாயின் மகன்கள்.