சங்கீதம் 93
1 யெகோவா ஆளுகை செய்கிறார்,  
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,  
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;  
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.   
2 உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;  
நீர் என்றென்றும் இருக்கிறீர்.   
3 யெகோவாவே, நதிகள் எழும்பின;  
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;  
நதிகள் அலைதிரண்டு எழும்பின.   
4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,  
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.   
5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;  
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக  
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.