சங்கீதம் 128
ஆரோகண பாடல். 
 
1 யெகோவாவுக்குப் பயந்து,  
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.   
2 உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;  
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.   
3 உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்  
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;  
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.   
4 இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்  
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.   
5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;  
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.   
6 நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,  
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.